முகப்பு /செய்தி /புதுச்சேரி / திருநங்கைகளுக்கு மனைப் பட்டா.. நில அளவை துறைக்கு உத்தரவிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

திருநங்கைகளுக்கு மனைப் பட்டா.. நில அளவை துறைக்கு உத்தரவிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

வில்லியனூர் பகுதியில்  புறம்போக்கு நிலம் இருக்கிறதா என்பதை பார்வையிட்டு திருநங்கையருக்கு  மனைபட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் திருநங்கையருக்கு மனைப்பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்க நில அளவை துறை இயக்குனருக்கு  முதலமைச்சர் ரங்கசாமி  உத்தரவிட்டார்.

திருநங்கைகளின் பிரதிநிதிகள்  இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். அப்போது அவர்கள், இந்தியாவிலே எங்கும் இல்லாத வகையில் திருநங்கைகளுக்கு ஓய்வூதியத்தை புதுச்சேரி அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினர்.  இதேபோல் திருநங்கைகள் வசிப்பதற்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டனர்.

திருநங்கைகளுக்கு என தனி நல வாரியம்  அமைத்தால் நன்றாக இருக்கும். எந்த பகுதிக்கு சென்றாலும் தங்களை இச்சையாகவே பார்க்கிறார்கள். பிச்சை எடுக்கத்தான் நாங்கள் வருவதாக நினைக்கிறார்கள். அதனால் எங்களுக்கென தனி குடியிருப்பு பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

அனைவருக்கும் ரேஷன் கார்டு உள்ளதா என முதலமைச்சர் கேட்டதற்கு ரேஷன் கார்டு உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். அப்பொழுது அங்கு இருந்த நில அளவை  துறை  இயக்குனர் ரமேஷிடம், இவர்களுக்கு மனைபட்ட கொடுப்பதற்கு என்ன ஏற்பாடு செய்ய முடியும்? என்று கேட்டார். இதற்கு அவர்களுக்கு மனை பட்டா கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.  அரசு புறம்போக்கு நிலத்தில் இவர்களுக்கு மனைபட்டா கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என முதலமைச்சரிடம் தெரிவித்தார்.

வில்லியனூர் பகுதியில்  புறம்போக்கு நிலம் இருக்கிறதா என்பதை பார்வையிட்டு திருநங்கையருக்கு  மனைபட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதற்கு திருநங்கைகள் முதலமைச்சர் நன்றி தெரிவித்து புறப்பட்டு சென்றனர்.

First published:

Tags: Puducherry, Tamil News, Transgender