ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பைக்கில் ட்ரிபிள்ஸ்.. நிறைமாத கர்ப்பிணியை 2மணி நேரம் ரோட்டில் நிற்க வைத்த காவலர்.. வலுக்கும் கண்டனம்!

பைக்கில் ட்ரிபிள்ஸ்.. நிறைமாத கர்ப்பிணியை 2மணி நேரம் ரோட்டில் நிற்க வைத்த காவலர்.. வலுக்கும் கண்டனம்!

புதுச்சேரியில் கர்ப்பிணியை காக்க வைத்த போக்குவரத்துறை காவலர்

புதுச்சேரியில் கர்ப்பிணியை காக்க வைத்த போக்குவரத்துறை காவலர்

Puducherry | கர்ப்பிணி பெண்ணை அலைக்கழித்த போக்குவரத்து காவல் துறையினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (19). இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு நேற்று காலை வலி ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு நேற்று பிரசவ நாள் என்பதால் சிகிச்சை பெற்று வரும் ஜிப்மருக்கு செல்ல கூறியுள்ளார். அப்போது வாகனங்கள் கிடைக்காததால் இரு சக்கர வாகனத்தில் முரசொலி, இலக்கியா, உறவினர் கலையரிசி ஆகியோர் சென்றுள்ளனர்.

ஜிப்மர் அருகே வந்த போது போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆறுமுகம் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். கையில் அவ்வளவு தொகை இல்லை என கூறியும் விடாமல் வாக்குவாதம் செய்து கர்ப்பிணியை 2 மணி நேரம் சாலையில் காக்க வைத்துள்ளார்.

இதனை கண்ட மற்றொரு காவலர் ஒருவர் கர்ப்பிணியை அலைகழிக்க வேண்டாம் என கூற அவர் ஏற்கவில்லை.

Also see...  குப்பை பொறுக்குவதுபோல ஆள் இல்லாத வீடுகளுக்கு ஸ்கெட்ச்.. இரவில் கொள்ளை.. தஞ்சையில் கைதான இளைஞர்... 

அப்போது அதிமுக போராட்டம் நடந்ததால் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் தலையிட்டு அனுப்பி வைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Pregnancy, Puducherry, Transport, Women