ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

போதை இல்லா புதுச்சேரி வேண்டும்... விழிப்புணர்வு பதாகையுடன் பேரணியில் ஈடுபட்ட சிறுவர்கள்!

போதை இல்லா புதுச்சேரி வேண்டும்... விழிப்புணர்வு பதாகையுடன் பேரணியில் ஈடுபட்ட சிறுவர்கள்!

சிறுவர்கள் பேரணி

சிறுவர்கள் பேரணி

Puducherry rally | புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட பலரும் தயாராகி வரும் நிலையில், சிறுவர்கள் பலர் போதை இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என பேரணியாக சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் போதை இல்லா மாநிலமாக மாற வேண்டும் என ஏராளமான  சிறுவர்கள் கையில் பதாகையுடன் பேரணியாக சென்றனர்.

புத்தாண்டுக்காக புதுச்சேரி தயாராகி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் மது பிரியர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளையும் தனியார் மதுபான நிறுவனங்கள் கடைகள் வழங்கி பல்வேறு இடங்களில் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இவற்றை கண்டித்தும் போதை இல்லா புதுச்சேரியை மாற்றிடவும் அனைவரும் அறிவியல் பூர்வமான கல்வி என்ற முழக்கத்தை வலியுறுத்தி பாலர் பட்டாம்பூச்சிகள் இயக்கத்தின் சார்பில் சிறுவர்களின் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் இருந்து தொடங்கிய சிறுவர்களின் ஊர்வலத்திற்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தரணி தலைமை தாங்கினார்.

மேலும் நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் கலந்து கொண்டனர் முன்னதாக காமராஜர் சிலையிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தில் மகாத்மா காந்தி, பாரதியார், ஜான்சி ராணி, ஆகியோர் உருவ படத்துடன் போதை இல்லா புதுச்சேரி என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை சிறுவர்கள் ஏந்தியவாறு பங்கேற்றனர். ஊர்வலம் நேரு வீதி கடந்து மாதா கோவில் வீதியில் உறுதிமொழி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

First published:

Tags: New Year 2023, Puducherry