புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 48). இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஷ்ணுகுமார் (வயது 17) பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் விஷ்ணுகுமார் பைக்கை எடுத்துக்கொண்டு பத்துக்கண்ணு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது பத்துக்கண்ணு பகுதியில் இருந்து வந்த மொபட்டின் மீது மோதியுள்ளார். இதில் மொபட்டின் வந்த பெண்மணிக்கு காலில் அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது பணியில் இருந்த உதவி சப்- இன்ஸ்பெக்டர் இருதரப்பையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பிறகு அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் இருந்து பாபுவின் வீட்டிற்கு மூன்று லட்சம் நஷ்ட ஈடு கேட்டு சம்மன் வந்துள்ளது.
மூன்று லட்சத்தை எப்படி நாம் கொடுக்க முடியும் என்று இரண்டு நாட்களாக மன உளைச்சலில் விஷ்ணுகுமார் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி பெற்றோர்கள் வேலைக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த விஷ்ணுகுமார், எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பெற்றோர்கள் வேலை முடித்து மாலையில் வீட்டுக்கு வந்த போது விஷ்ணுகுமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக பாபு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த விஷ்ணுகுமார் இறந்து விட்டார். இது சம்பந்தமாக பாபு வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், விஷ்ணுகுமார் இறப்பதற்கு முன்பு தனது செல்போனில், இறப்பதற்கான காரணங்கள் குறித்து பேசி உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்தார். இதில் அவர் கூறும்போது, தான் லேசான விபத்து ஏற்படுத்தியதாகவும் இதனை பெரிதுபடுத்தி போலீசார் வழக்கு பதிந்துள்ளதாகவும் எங்களால் 3 லட்சம் பணம் தர முடியாத சூழ்நிலையில் இருப்பதாலும் நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக கூறியுள்ளார்.
Must Read : சென்னையில் நடந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் கோடநாடு பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவையா?
மிகுந்த மன உளைச்சலின் காரணமாகவே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது இறப்புக்கு வில்லியனூர் போக்குவரத்து போலீசார் மற்றும் புகார் கொடுத்தவர்களும் தான் காரணம் என்றும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பதிவிட்ட இந்த வீடியோ அவர் இறந்ததால் 3 மாதங்களுக்கு பிறகு தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.