முகப்பு /செய்தி /புதுச்சேரி / களைகட்டும் மாசிமகம் விழா.. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

களைகட்டும் மாசிமகம் விழா.. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பள்ளிகள் இன்று திறப்பு

பள்ளிகள் இன்று திறப்பு

School leave | மாசி மக பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மாசி மகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 7ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி வைத்துக்குப்பம் கடற்கரையில் ஆண்டுதோறும் மாசிமகம் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 7ஆம் தேதி மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழாவை எதிர்நோக்கி அப்பகுதி மக்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த பண்டிகையை முன்னிட்டு வரும் 7ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Masi Magam, Puducherry, School Leave