ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

தமிழகத்தில் தடை... புதுச்சேரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு- அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் தடை... புதுச்சேரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு- அமைச்சர்கள் பங்கேற்பு

ஆர்.எஸ்.எஸ். பேரணி

ஆர்.எஸ்.எஸ். பேரணி

காமராஜர் சாலையில் தொடங்கிய பேரணியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன், எம்பி செல்வகணபதி மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாஜக அங்கம் வகிக்கும் புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் இன்று  அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதலில் தமிழக அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

  அப்போது, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.  இதையடுத்து, இது தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி அனுமதி வழங்கியது.

  அதேவேளையில், புதுச்சேரி அரசில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பேரணி தொடங்கியது.  காமராஜர் சாலையில் தொடங்கிய பேரணியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன், எம்பி செல்வகணபதி மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

  இதையும் படிங்க: மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்: தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை

  இதில், அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் பங்கேற்றனர். புதுச்சேரியில் துணை ராணுவப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் முக்கிய சந்திப்புகளில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். மாலை 5 மணியளவில்  சுதேசி மில் வளாகத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்ட வளாகத்திலும் இந்த பேரணி முடிவடைந்தது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Puducherry, RSS