Home /News /puducherry /

புதுச்சேரியில் ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக சேர்க்கப்பட்டதால் ரூ.12 லட்சம் மின் கட்டணம்.. அதிர்ச்சியில் உறைந்த வாட்ச்மேன்

புதுச்சேரியில் ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக சேர்க்கப்பட்டதால் ரூ.12 லட்சம் மின் கட்டணம்.. அதிர்ச்சியில் உறைந்த வாட்ச்மேன்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடந்த முறை மீட்டர் 20630 இருந்த மீட்டர் ரீடிங், இந்த முறை 21115 ஆக வந்துள்ளது. ஆனால் மின் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், 211150 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
    புதுச்சேரியில் மின் துறையின் அலட்சியம் காரணமாக வாட்ச்மேன் வீட்டிற்கு 12 லட்ச ரூபாய்க்கு மின் கட்டண பில் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகர் திருவள்ளூர் வீதியை சேர்ந்தவர் சரவணன்(57). டிவி மெக்கானிக்கான இவர், இரவு நேரத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். வழக்கமாக தன் வீட்டிற்கு மின் கட்டணமாக மாதம் 800 ரூபாய் வரும். கடந்த இரண்டு மாதங்களாக தனியார்மயத்தை கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இரண்டு மாதமாக மீட்டர் ரீடிங் எடுக்கப்படவில்லை.

    புதுச்சேரி முழுவதும் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து பில் வர மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மின் கட்டண ஊழியர்கள், சரவணன் வீட்டிற்கு வந்து மின் கட்டணமாக 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் கட்ட வேண்டும் என பில் கொடுத்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன், முத்தியால்பேட்டை மின் அலுவலகத்தில் சென்று நேரடியாக முறையிட்டார்.

    ALSO READ | மாணவர்களுக்கான ‘சிற்பி’ எனும் புதிய திட்டம் இன்று தொடக்கம் - என்ன சிறப்பு அந்த திட்டத்தில்?

    அவர்கள் மீட்டர் ரீடிங் செய்யும் போது ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக சேர்ந்து விட்டதாக அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.கடந்த முறை மீட்டர் 20630 இருந்த மீட்டர் ரீடிங், இந்த முறை 21115 ஆக வந்துள்ளது. ஆனால் மின் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், 211150 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்டதால் சரவணனுக்கு 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என வந்துள்ளது. மின் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக சேர்க்கப்பட்டு இந்த தவறு நிகழ்ந்துள்ளது.

    மேலும் இது சரி செய்து கொடுத்து விடுவோம் என்று கூறி நேற்று ஒருநாள் முழுவதும் சரவணனை மின் துறை அதிகாரிகள் அலைகழித்து விட்டு இன்று வருமாறு தெரிவித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த சரவணன் வீடு திரும்பினார்.

    செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி
    Published by:Anupriyam K
    First published:

    Tags: EB Bill, Electricity bill, Puducherry

    அடுத்த செய்தி