ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

கஞ்சா விற்பதில் தொழில்போட்டி.. மதுகொடுத்து ரவுடி கொலை - புதுச்சேரியில் பயங்கரம்

கஞ்சா விற்பதில் தொழில்போட்டி.. மதுகொடுத்து ரவுடி கொலை - புதுச்சேரியில் பயங்கரம்

கொலை செய்யப்பட்ட ரவுடி

கொலை செய்யப்பட்ட ரவுடி

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஆரியப்பாளையம் ஊருக்கு வெளியே ஒரு முட்புதரில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த  போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை, புதுநகர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்கிற பிரவீன்குமார் (23) என்பதும் தெரியவந்துள்ளது. ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பிரவீனும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகிலன் என்பவரும் நண்பர்கள் என்பதும் இவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது. இதனால் இருவருக்கும் மறைமுகமாக கஞ்சா தொழில் போட்டி இருந்து வந்துள்ளாக கூறப்படுகிறது. பிறகு மேற்கொண்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முகிலன் கஞ்சா விற்பனை செய்வதை பிரவீன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் முகிலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சாரி மாமா.. என் காதல் உனக்கு தெரியலை” - காதலில் மோதல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முகிலன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அன்றையிலிருந்து தன்னை போலீசிடம் காட்டிக்கொடுத்த பிரவீனை கொலை செய்ய வேண்டும் என்று முகிலன் திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பிரவீனும், முகிலனும் மது வாங்கிக்கொண்டு ஆரியப்பாளையம் பகுதியில் உள்ள முட்புதருக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : திருச்சியை மிரள வைத்த 5 கொலைகள்... கண்களை மூடிய கள்ளக்காதல்.. சாமியார் கண்ணன்-கள்ளக்காதலி யமுனாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

அப்போது இருவரும் கூட்டாக சேர்ந்து மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. பின்னர் முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீனின் பின்பக்க கழுத்தில் ஒரே வெட்டாக வெட்டி கொலை செய்துள்ளார். இதில் பிரவீன் ரத்தவெள்ளத்துடன் அமர்ந்தப்படியே கீழே விழுந்து துடித்துடித்து இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவற்றின் உதவியோடு கத்தி உள்ளிட்ட  தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Tamil News