ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுவையில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய வாகனம்- பொதுமக்கள் அச்சம்

புதுவையில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய வாகனம்- பொதுமக்கள் அச்சம்

உடைந்த சாலை

உடைந்த சாலை

புதுச்சேரியில் முக்கிய பகுதியில் திடீரென சாலை உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சமீபத்தில் புதுவை மிஷன் வீதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் திடீரென சாலை உள்வாங்கியது. அதை பொதுப்பணித்துறையினர் ஜல்லி கொட்டி நிரப்பினார்கள்.

இந்தநிலையில் அஜந்தா சிக்னல் அருகே காந்தி வீதியில் சாலை திடீரென உள்வாங்கியது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் சுமார் 3 அடி பள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் சிக்கிய சரக்கு வாகனம்

நீண்ட நேர போராட்டத்துக்குப்பின் அந்த வேன் மீட்கப்பட்டது. சாலை உள்வாங்கிய இடத்தின் அருகிலேயே சாக்கடை வாய்க்கால் செல்கிறது.

சேதமடைந்த சாலை

தற்போது மழை பெய்து வரும் நிலையில் பூமிக்கடியில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியதால் திடீரென பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று தெரிகிறது. அதனை சரிசெய்ய பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

செய்தியாளர்: பிரசாந்த், புதுச்சேரி.

First published:

Tags: Local News, Puducherry