ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காவல்துறை தடியடி

புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காவல்துறை தடியடி

புதுச்சேரியில் காவல்துறை தடியடி

புதுச்சேரியில் காவல்துறை தடியடி

புதுச்சேரி கடற்கரை சாலையில் 50,000 பேர் குவிந்துள்ளதால் செல்போன் நெட் ஒர்க் பாதிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் மக்கள் கூட்டம் அதிகமானதால், நிலையை சமாளிக்க முடியாமல் தடியடி நடத்தினர்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் கூடியிருந்தனர். அதிக மக்கள் திரண்டதால் இதற்கு பிறகு கடற்கரை சாலைக்கு வருபவர்கள் திரும்ப அனுப்பப்படுகிறார்கள். இதையும் மீறி வருபவர்களை போலீஸ் தடியடி நடத்தி துரத்தி விடுகிறார்கள்.

கூட்டத்தை கட்டுபடுத்த முடியாத நிலையில் காந்தி சிலை அருகில் போடப்பட்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

காந்தி திடல் அருகே போடப்பட்ட பாட்டு கச்சேரி நிறுத்தப்பட்டதற்கு பாட்டு போட கோரி இளைஞர்கள் தரையில் அமர்ந்து பாட்டு போடு...பாட்டுபோடு என கோஷமிட்டு வருகிறார்கள். இதனால் போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். மேலும் கடற்கரை சாலையில் 50,000 பேர் குவிந்துள்ளதால் செல்போன் நெட் ஒர்க் பாதிக்கப்பட்டது.

First published:

Tags: New Year, Police Lathi Charge, Puducherry