முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரி கடலில் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார்... இதுதான் காரணம்..!

புதுச்சேரி கடலில் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார்... இதுதான் காரணம்..!

புதுச்சேரி கடலில் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார்

புதுச்சேரி கடலில் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார்

Puducherry News : புதுச்சேரி கடல் மற்றும் கடலோர பகுதிகளில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கடலோர காவல் நிலைய போலீசார் நேற்று புதுச்சேரி கடலோர பகுதிகள் மற்றும் கடலில் திடீரென தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து  வீராம்பட்டினம், புதுகுப்பம், நல்லவாடு,  பனித்திட்டு, நரம்பை, மூர்த்திகுப்பம் வரை 12 நாட்டிக்கல் மைல் தூரம் வரை சென்று சோதனையிட்டனர். காவல் கண்காணிப்பாளர் பழனிவேல் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

சுருக்கு மடிவலை பயன்படுத்த நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 12 நாட்டிகள்  மைல் தாண்டி தான் வலையை பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடிக்கிறார்களா என்பதனை அறிய இந்த சோதனை நடைபெற்றதாக கடலோர போலீசார் தெரிவித்தனர்.

மேலும், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட நாட்களை தாண்டி சுருக்குமடி வலை பயன்படுத்தப்பட்டால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினர். எனவே, சுருக்குமடி வலை பயன்படுத்தும் விதிமுறைகளை காவல் துறையினர் கண்காணிப்பதுடன் சட்டவிரோத செயல்களில் யாராவது ஈடுபடுகிறார்களா? என்றும் சோதனையிடுகின்றனர். இந்த சோதனையானது அடிக்கடி மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Local News, Puducherry