ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து அபராதம் விதிக்கும் புதுச்சேரி போலீசார்

சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து அபராதம் விதிக்கும் புதுச்சேரி போலீசார்

சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம் விதிக்கும் புதுச்சேரி போலீசார்

சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம் விதிக்கும் புதுச்சேரி போலீசார்

Puducherry News : புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் புதுவையை நோக்கி படையெடுக்கின்றனர். மேலும் ஹோட்டல்களும் தற்பொழுது கலை கட்டி வருகிறது.

பொதுவாக கார், பஸ், ரயில்களில் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றி வருகின்றனர். புதுச்சேரியில் இது அவர்களுக்கு மிகவும் எளிதாக உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி போலீசார் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அபராத வசூலில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வீதிகள் மட்டுமல்லாது சிறிய வீதிகளில் கூட நின்றுகொண்டு இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மடக்குகின்றனர்.

இதையும் படிங்க : புதுச்சேரியில் கைதிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனம்...

 லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஹெல்மெட் அணியாதது, முறையாக வாகனங்களை நிறுத்தவில்லை, அதிக வேகமாக வாகனத்தை ஓட்டியது என கூறி அபராதம் விதிக்கின்றனர். குற்றம் செய்ததுபோல் நடுரோட்டில் நிற்க வைத்து அபராதம் விதிப்பது சுற்றுலா பயணிகளை வேதனை அடைய செய்துள்ளது.

புதுச்சேரிக்கு சுற்றுலா வருவது தேவையா? என்று யோசிக்கும் அளவுக்கு அவர்களது மனநிலை தள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இதே நிலையை கடைபிடித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் தான் புதுவையின் வருமானம் பெருகி வருகிறது. பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஆனால் போலீசாரின் கெடுபிடி காரணமாக வரும் காலங்களில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறையும் வாய்ப்பு உள்ளது.

எனவே போலீசாரின் வசூல் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை அரசு வழங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry