புதுச்சேரி அரவிந்தர் நகர் மக்கள் 20 ஆண்டுகளாக சாலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் 11 வீதிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு 20 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனை கண்டித்து மக்கள் புதுச்சேரி - கடலூர் சாலையில் மறியல் செய்ய ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை போலீசார் முருங்கம்பாக்கம் சந்திப்பில்
தடுத்து நிறுத்தினார்கள். தகவல் அறிந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் தக்ஷிணாமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தி முயற்சித்தார். ஆனால் சட்டமன்ற உறுப்பினரை மக்கள் முற்றுகையிட்டு 20 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தராததை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரை மணி நேரமாக சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். தொகுதி மேம்பாட்டு நிதி இன்னும் வழங்கப்படாததால் பல பணிகள் நிற்பதை சட்டமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். மேலும் மக்களை சமாதானப்படுத்தி அவரே நேரடியாக நடந்து வந்து அரவிந்தர் நகர் பகுதியில் பார்வையிட்டார்.
மார்ச் மாதத்துக்குள் சாலைகளை சீரமைப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் முருங்கப்பாக்கம் பகுதி ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.
தொடர்ந்து இது குறித்து பேசிய பொதுமக்கள், அரவிந்தர் நகர் பகுதி என கேட்டாலே ஆட்டோக்கள் வருவதில்லை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால்பெண்கள் வாகனத்தில் செல்லும்போது பலமுறை விழுந்து கை கால்கள் உடைந்துள்ளது என பொதுமக்கள் புகார் கூறினார்கள். மழைக்காலத்தில் சாலைகள் முழுமையாக நீரில் நிரம்பி இருக்கும். வருவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் . பள்ளிகளுக்கும் வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் இப்பகுதியில் குப்பை வாரும் பணியும் நடைபெறுவதில்லை என புகார் கூறினர்.
மேலும், 20 ஆண்டுகளாய் இப்பகுதிக்கு ஒரு அதிகாரி கூட வந்து பார்த்ததில்லை என ஆத்திரத்துடன் கூறினர்.
செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puducherry