ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

யானை லட்சுமிக்கு 30ம் நாள் காரியம் செய்த புதுவை மக்கள்..

யானை லட்சுமிக்கு 30ம் நாள் காரியம் செய்த புதுவை மக்கள்..

யானை லட்சுமிக்கு மரியாதை செலுத்தப்படுகிறது

யானை லட்சுமிக்கு மரியாதை செலுத்தப்படுகிறது

Puducherry News : மறைந்த புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை லட்சுமிக்கு 30ம் நாள் நினைவு நிகழ்ச்சி வேத மந்திரங்கள் முழங்க சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரியில் பிரசித்திபெற்ற ஸ்ரீமணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மி இறந்து ஒரு மாதம் ஆகிறது. அதனை நினைவுபடுத்தும் வகையில் 30ம் நாள் நினைவு நாள் நிகழ்ச்சி புதுச்சேரி சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி புதுச்சேரி யானையின் இருப்பிடமான ஈஸ்வரன் கோயில் வீதியில் இருந்து புறப்பட்ட மங்கள கலச நீர் மற்றும் மலர் அஞ்சலி ஊர்வலம் கடலூர் சாலை வழியாக சிவ வாத்தியங்கள் முழங்க யானை புதைக்கப்பட்ட இடமான ஜேவிஎஸ் நகரில் உள்ள நினைவிடத்திற்கு வந்தடைந்தது.

இதனைத்தொடர்ந்து வேத மந்திரங்கள், மற்றும் சிவ வாத்தியங்களும் முழங்க வேத மந்திரங்களுடன் யானையின் சமாதியின் மீது மங்கள கலச நீர் ஊற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க : அதிகரிக்கும் கொரோனா... மாஸ்க் விலை 3 மடங்கு உயர்வு

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு தாங்கள் கொண்டு வந்து மலர்களை யானையின் நினைவு சமாதியின் மீது தூவி வழிபட்டனர்.

செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி

First published:

Tags: Local News, Puducherry