புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் பனை மரங்களில் உள்ள விஷ வண்டு கூடுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
புதுச்சேரி அடுத்த சின்ன வீராம்பட்டினம் செல்லும் சாலையில் பனை மரங்கள் ஏராளமாக உள்ளன. அதில் உள்ள மரத்தில் விஷவண்டுகள் கூடு கட்டி அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கொட்டி வருகின்றன. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விஷ வண்டு கடித்தால் இதயம் பாதித்து, மரணம் நிகழும் என அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு செல்ல வெகு நேரம் ஆவதால் வீட்டிலேயே வீட்டு முறை வைத்தியம் செய்து அவர்களே பூச்சி கடியை குணப்படுத்த கூடிய அவல நிலையும் உருவாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்களே விஷ வண்டு கூடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே விஷ வண்டு விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இல்லாமல் உடனடியாக விஷம் வண்டு கூடுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்ன வீராம்பட்டினம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: பிரசாந்த், புதுச்சேரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puducherry