புதுச்சேரியில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு எதிராக பிரதமரிடம் சென்று கூட முறையிடுவேன் என எம்.எல்.ஏ ஜான் குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார், “நகரப் பகுதியில் குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிரான்ஸ் நாடு புதுச்சேரிக்காக ரூ.534 கோடி நன்கொடையாக அளித்துள்ளது என்றார்.” என தெரிவித்தார்.
இந்த நிதியை கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் மட்டுமே குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்படி ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்திற்கு பிரான்ஸ் நாடு நிதி அளித்து இருந்தால் இது இந்தியாவிற்கு செய்யும் துரோகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: என்னை அடித்தால் இருமடங்கு திருப்பி அடிப்பேன்... அண்ணாமலை பேட்டி
இதனைதொடர்ந்து பேசிய அவர், மக்கள் பாதிக்கும் இந்த திட்டத்தை கைவிட்டு விட்டு இயற்கையோடு சார்ந்து ஏரிகளில் நீர் நிரப்பி அந்த நீரை சுத்திகரித்து அதன் மூலம் புதுச்சேரியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தை புதுச்சேரியில் கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட வேண்டும்.
வருங்கால சந்ததிகள் நிம்மதியோடு வாழ ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அப்படி கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இதிலும் முடியவில்லை என்றால் பிரதமரிடம் சென்று முறையிடுவேன். அதிலும் நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். சட்டமும் அரசு சொல்வது தான் சரி என்றால் மண்ணைக் காக்க, நாட்டை விட்டு செல்வதை தவிர வேறு வழி இல்லை எனவும் ஆவேசமாக குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக உள்ள நிலையில் தற்போது காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் மட்டும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP MLA, PM Modi, Puducherry