Home /News /puducherry /

புதுச்சேரி அமைச்சர்களின் கார்களுக்கு எரிபொருள் செலவு மட்டும் ரூ.70 லட்சம்: ஆர்டிஐ தகவல்

புதுச்சேரி அமைச்சர்களின் கார்களுக்கு எரிபொருள் செலவு மட்டும் ரூ.70 லட்சம்: ஆர்டிஐ தகவல்

புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி சட்டசபை

Puducherry : புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் 10 நாட்கள் மட்டுமே கூடிய நிலையில், அமைச்சர்களின் வாகன செலவு ரூ. 4 கோடி என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் 10 நாட்கள் கூடிய நிலையில், அமைச்சர்கள் ரூ.3.3 கோடிக்கு வாங்கிய புதிய வாகனங்களின் எரிபொருள் செலவு ரூ. 70 லட்சம் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் தந்துள்ளனர். இதனால், சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநருக்கு மனு தரப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, கடந்தாண்டு புதுச்சேரி சட்டப்பேரவை கூடிய நாட்கள் எவ்வளவு, அமைச்சர்கள் வாங்கிய புதிய கார்களுக்கான எரிபொருள் செலவு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார்.

அதில், கிடைத்த தகவல்களை மனுவாக ஆளுநருக்கு அளித்துள்ளார். அதில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொறுப்பேற்ற அரசின் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு பழைய வாகனங்கள் தவிர்த்து 3.3 கோடி ரூபாய்க்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.
முதல்வர் உட்பட 6 அமைச்சர்கள்,சபாநாயகர், துணை சபாநாயகர்,
அரசு கொறடா, முதல்வரின் நாடாளுமன்ற செயலர் ஆகியோரின் வாகனங்களுக்கு எரிபொருள் செலவு ரூ. 70.12 லட்சம் எனவும், புதுச்சேரி சட்டப்பேரவை 10 நாட்கள் கடந்த நிதியாண்டில் கூடியுள்ளதாகவும் ஆர்டிஐயில் தகவல் தந்துள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையுடன் கூடிய மிகச் சிறிய யூனியன் பிரதேசமாகும். இந்நிலையில் சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் 10 பேரின் வாகனங்களுக்கு ஓராண்டு எரிபொருள் செலவு ரூ.70.12 லட்சம் எனில், ஒருவருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு எரிபொருள் செலவு ரூ.58,439/- ஆயிரம். இதன்மூலம் இவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 200 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய தூரம் 480 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுதான். இதில் ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டர் என்பது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக புதுச்சேரி அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை பிணைப்பத்திரங்களை வைத்து 100கோடி, 125 கோடி என கடன்பெரும் அளவிற்கும், மதுபான விற்பனை வரி மூலம்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என நீதிமன்றத்தின் பிரமாண பத்திரத்தில் உறுதிகூறும் நிலையில் உள்ளது.

Must Read : மக்களின் வாழ்வை மேம்படுத்துவதை இலவசம் என கொச்சைப்படுத்துவதா? இதுதான் மோடி, சீமானின் உண்மையான முகம்.. ஜோதிமணி ட்விட்

கடும் நிதி நெருக்கடி உள்ள நிலையில், மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமலும், பல அரசு பொது நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் ஊதியம் அளிக்க முடியாமலும் உள்ள நிலையில், புதுச்சேரி மக்களின் நலன்கருதியும் அரசின் நிதி நிலையையும் கருத்தில் கொண்டும் அமைச்சர்களின் எரிபொருள் செலவினம் மற்றும் பிற தேவையில்லாத செலவினங்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published:

Tags: Puducherry, RTI, Vehicle

அடுத்த செய்தி