முகப்பு /செய்தி /புதுச்சேரி / “மெஸ்ஸிக்காகவே வந்தோம்..” அர்ஜெண்டினா கொடியை முகத்தில் வரைந்த புதுச்சேரி ரசிகர்கள்!

“மெஸ்ஸிக்காகவே வந்தோம்..” அர்ஜெண்டினா கொடியை முகத்தில் வரைந்த புதுச்சேரி ரசிகர்கள்!

புதுச்சேரி ரசிகர்கள்

புதுச்சேரி ரசிகர்கள்

Messi fans | பிரான்ஸ் சார்பாக ஒளிப்பரப்பட்ட திரையை காணவந்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் மெஸ்ஸியின் ரசிகர்கள் அர்ஜெண்டினா அணியின் கொடியை முகத்தில் வரைந்து தங்களது ஆதரவுகளை வெளிப்படுத்தினர்.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

புதுச்சேரி பிரெஞ்சு தூதரகம் மற்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியை கான கடற்கரை சலையில் உள்ள காந்தி திடலில் பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்டது. இறுதிப் போட்டியை காண குவிந்த இரு அணியின் தீவிர ரசிகர்களும் போட்டியின் முடிவை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

புதுச்சேரி ரசிகர்கள்

குறிப்பாக மெஸ்ஸியின் ஆட்டத்தை காண புதுச்சேரியில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்கள் ஒவ்வொரு முறையும் மெஸ்ஸி கோல் அடிக்கும் போது, கரகோஷங்களை எழுப்பியும், விசில் அடித்தும் உற்சாகமடைந்தனர்.

மேலும், அர்ஜெண்டினா நாட்டின் கொடியை தங்களது முகத்தில் வரைந்து தீவிர ரசிகர்கள் என்பதை வெளிப்படுத்தினர். இது குறித்து பேசிய ரசிகர்கள், புதுச்சேரி பிரான்ஸ் நாட்டு இணைந்து இந்த போட்டியை ஒளிபரப்பினாலும் மெஸ்ஸிக்காகவே இந்த ஆட்டத்தை நாங்கள் பார்க்க வந்ததாகவும், உலகக் கோப்பை வாங்கி கொடுத்துவிட்டு ஓய்வு பெற்று விடுவேன் என்று அறிவித்தது போல அதை தற்போது மெஸ்சி நிரூபித்து விட்டார் என்றும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

செய்தியாளர்: பிரசாந்த், புதுச்சேரி.

First published:

Tags: Argentina, Football, Puducherry