புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பிரபல யூடியூபரின் விலையுயர்ந்த பைக்கை திருடி சென்ற வழக்கில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் சென்னையை சேர்ந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜ் ( வயது 30) தி டி ஸ்கொயர் விலாக்ஸ் ( The D square Vlogs ) என்கிற பல ஊர்களில் விற்பனை செய்யப்படும் உணவு குறித்தான யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். புதுச்சேரியில் விற்பனை செய்யும் உணவு குறித்து தனது யூடியூப் சேனலுக்கு படம் பிடிப்பதற்காக தனது நண்பருடன் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரிக்கு தனது விலை உயர்ந்த யமஹா இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு காமராஜர் சாலையில் உள்ள ஒரு விடுதியின் வெளியே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு விடுதியில் தங்கியுள்ளார். மறுநாள் காலை விடுதியின் வெளியே இருந்த வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து இதுகுறித்து தேவராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 22 வயது வாலிபர் ஒருவர் பைக்கின் பூட்டை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றது பதிவாகியிருந்தது.
தொடர்ந்து இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்றதாக சென்னை போலீசார் தேவராஜ் எண்ணிற்கு அபராத குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். இதை அவர் புதுச்சேரி போலீசாருக்கு தெரிவித்ததையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் சேர்த்து கிழக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த சதிஷ் (22) என தெரியவந்தது.
அதையடுத்து சதீசை தேடி அவரது வீட்டிற்கு விரைந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து சென்று விசாரணையை தொடங்கினர். அதில், சென்னையில் வாடகை கார் அலுவலகம் ஒன்றில் மெக்கானிக்காக பணி புரிந்து வருவதும், கடந்த அக்டோபர் மாதம் புதுச்சேரிக்கு ஒரு நிகழ்ச்சி வந்த போது மது அருந்தி விட்டு விலை உயர்ந்த பைக் மீது இருந்த ஆசையால் தேவராஜின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை ஒப்புகொண்டார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசா கைது செய்யப்பட்ட சதீஷை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike Theft, Puducherry