கடலூர் மாவட்டம் மேலூர் குப்பத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவர் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்தார். அதில், அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42) என்பவருடன் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிருந்தாவனம் பிள்ளையார் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் எளிமையாக திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு சீர் வரிசையாக 6 சவரன் நகையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் பெற்றோர் வழங்கினார். அதன் பிறகும் வரதட்சணை கேட்டு சீனு துன்புறுத்தினார் என்று தெரிவித்துள்ளார். இதனால், தான் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டு, கணவர் சீனு மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சீனு குறித்து விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அவர் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்திருப்பதாகவும் அதை மறைத்து நான்காவதாக தன்னை திருமணம் செய்ததோடு, 5ஆவதாக மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக காயத்ரி தெரிவித்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், நில தரகர் என கூறிய சீனு, வேலைக்கு செல்லாமல் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தன்னை ஏமாற்றியது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஆட்களை அனுப்பி தன்னையும் தனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டில் விடுத்துள்ளார் என்றும் காயத்ரி தெரிவித்துள்ளார்.
Must Read : அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள்.. சசிகலா
இதனால், தனக்கு நேர்ந்தது போல் வேறு எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது என்ற நோக்கத்தில், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காயத்ரி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.