முகப்பு /செய்தி /புதுச்சேரி / குடும்பத்தையே சரமாரியாக வெட்டிய பெண்.. 2மாத குழந்தை மற்றும் பாட்டி பரிதாபமாக உயிரிழப்பு - காரைக்காலில் பயங்கரம்

குடும்பத்தையே சரமாரியாக வெட்டிய பெண்.. 2மாத குழந்தை மற்றும் பாட்டி பரிதாபமாக உயிரிழப்பு - காரைக்காலில் பயங்கரம்

புதுச்சேரி கொலை

புதுச்சேரி கொலை

Crime News : காரைக்காலில் பெற்ற தாயே குழந்தை மற்றும் பாட்டியை  சுயநினைவின்றி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karaikal, India

காரைக்கால் மாவட்டம் மேலபடுக்கை கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் துர்கா லட்சுமி (வயது 36). காரைக்காலை சேர்ந்த அக்கரைவட்டம் கிராமத்தை சேர்ந்த தீனதயாளனுக்கும் - துர்கா லட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து துர்கா லட்சுமி தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் திடீரென இன்று அதிகாலை எழுந்த துர்கா லட்சுமி மண்வெட்டியை எடுத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது பாட்டி, தாய், சகோதரர்கள் மற்றும் தனது 2 1/2 மாத பெண் குழந்தையை சரமாரியாக தாக்கியதோடு தன்னையும் தாக்கிக் கொண்டார்.

அதிகாலையில் பரமசிவம் வீட்டில் கேட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வந்துள்ளனர். துர்கா லட்சுமி நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டரை மாத பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அடுத்த சில நிமிடங்களில் பாட்டி வேதவள்ளி ( வயது 85) அவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Also Read: மருமகனை அடித்து மகளை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்ற பெண் வீட்டார்.. தென்காசியில் பரபரப்பு சம்பவம்..

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெடுங்காடு போலீஸார் துர்காலட்சுமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துர்காலட்சுமி கடந்த நான்கு ஐந்து நாட்களாக மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்ற தாயே குழந்தை மற்றும் பாட்டியை  சுயநினைவின்றி அடித்துக் கொன்ற சம்பவம் நல்லாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Karaikal, Puducherry, Tamil News