ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

விடுதலையாகும் கைதிக்கு 5 ஏக்கர் நிலம், தொழில் உதவி... அசத்தும் புதுச்சேரி சிறைச்சாலை..

விடுதலையாகும் கைதிக்கு 5 ஏக்கர் நிலம், தொழில் உதவி... அசத்தும் புதுச்சேரி சிறைச்சாலை..

puducherry prison

puducherry prison

விடுதலையாகும் கைதிக்கு 5 ஏக்கர் நிலம், கைதிகளின் குடும்பத்திற்கு தொழில் துவங்க தையல் இயந்திரம், மாவு அரவை இயந்திரம் மற்றும் கல்வி கற்க உதவி என புதுச்சேரி சிறைத் துறை அசத்தி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 350க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்கும், தண்டனைக் காலம் முடிந்து வெளியே செல்லும்போது சுயதொழில் செய்து குடும்பத்தை நடத்து வதற்கும் பல்வேறு பயிற்சிகளைக் புதுச்சேரி யூனியன் பிரதேச சிறைத்துறை கொடுத்து வருகிறது.

அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ‘ஶ்ரீ அரபிந்தோ சொசைட்டி’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குறைந்தபட்ச தண்டனை பெற்றவர்களுக்கும், ஆயுள் தண்டனை பெற்றுப் பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கும் யோகாசன பயிற்சி, நடன பயிற்சி, பொம்மை தயாரிப்பு பயிற்சி போன்றவை அளித்து வருகிறது. இதன் பயனாக கைதிகள் செய்யும் விநாயகர் சிலைகளுக்கு ஆண்டுதோறும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகளால் வரையப்பட்ட சுவர் ஓவியம் மற்றும் பேனர்கள்   சிறைத்துறையை கலைக்கூடமாக்கியுள்ளது. கைதிகளை மேன்படுத்துவதோடு நின்று விடாமல் அவர்களது குடும்பத்தின் மீது அக்கறை கொள்கிறது சிறைத்துறை. சமீபத்தில் நடந்த  காந்தி ஜெயந்தி விழாவில் சிறைக்கைதிகளுக்கு இனிப்பு மட்டுமல்ல இனிமையான திட்டத்தையும் செயல்படுத்தியது.

Read More : மது அருந்தி பேருந்தை இயக்கினால் டிஸ்மிஸ்... ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

சிறைவாசிகளின் குடும்பத்தாருக்கு கிரைண்டர், தையல் இயந்திரம், கைதிகளின் குழந்தைகளின் படிப்பிற்காக ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் என அரவிந்தர் சொசைட்டி சார்பில் வழங்கப்பட்டது. இதனை புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன் வழங்கினார்.

7 ஆண்டுகளாய் தண்டனை கைதியாக இருக்கும் வெங்கடாசலபதி என்பவரின் மனைவிக்கு மாவு அரைத்து விற்பனை செய்யும் இயந்திரம் வழங்கியுள்ளனர். 3 ஆண்டுகளாய் தண்டனை கைதியாக இருக்கும் விஜய்மாறன் என்பவரின் மனைவி விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார்.அவரது குழந்தை கீழே விழுந்து அடிப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து குழந்தையை கவனித்து வருகிறார். அவர் வீட்டிலேயே தொழில் செய்ய தையல் இயந்திரம் கொடுத்து உதவியுள்ளனர்.

இதேபோல், சிறைவாசிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை இரண்டு ஆண்டுகளாய்  சிறைத்துறை அளித்து வருகிறது.  அதற்காகச் சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றிப் புதர்மண்டிக் கிடந்த அந்த இடத்தை இரண்டே வாரத்தில் சீரமைத்து, மண்ணை உழுது, பாத்திகள் பிரித்து, தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து அசத்தியிருக்கிறார்கள் சிறைவாசிகள். அதேவேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 60 வகைப் பழச் செடிகள், 50 வகை மூலிகைச் செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.அப்படி பயிற்சி பெற்ற பல சிறைவாசிகள் தற்போது விவசாயிகளாய் மாறி விட்டனர்.

தண்டனை முடிந்து விரைவில் விடுதலையாக இருக்கும் பிரேம்குமார் இயற்கை விவசாயம் செய்ய சிறை அதிகாரிகளிடம் கூறினார் .அவருக்கு ஶ்ரீ அரபிந்தோ சொசைட்டி மூலம் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் தனக்கு மாதம் 25,000 ரூபாய் சம்பளமும் கிடைக்க இருப்பதாக நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

தண்டனைக்கான கூடாராமாக இருந்த சிறைச்சாலை இன்று மனமாற்றத்திற்கு சுய தொழிலுக்குமான பயிற்சி பட்டறையாக மாறி வருகிறது.விரைவில் நாட்டிற்கே எடுத்துகாட்டாக புதுச்சேரி சிறைச்சாலை மாறும் என்பதில் ஐயமில்லை.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Jail, Puducherry