புதுச்சேரியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் யோகா மத்திய இணை அமைச்சர் முருகன், முதலமைச்சர் ரங்கசாமி,ஆளுநர் தமிழிசை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, இஸ்லாமிய நாடுகளும் யோகாவை கொண்டாடியுள்ளன என்றும் யோகா ஒரு ஆரோக்கிய புரட்சி என்றும் கூறினார்.
புதுச்சேரியில் எட்டாவது ஆண்டாக சர்வதேச யோகா தின விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்த விழாவில் மத்திய அமைச்சர் முருகன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், சுற்றுலா துறை லட்சுமி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய துணை அமைச்சர் முருகன், ‘தினமும் யோகா செய்வதால் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் அதிகம் காணப்படும் மன பதற்றம், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவற்றில் இருந்து விடுபட யோகா சிறந்த வழி’ என்றார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், இந்திய கலையான யோகாவை உலக கலையாக மாற்றியவர் பிரதமர். இன்றைய வாழ்க்கை நிலைக்கு யோகா அவசியம். 33 இஸ்லாமிய நாடுகள் உட்பட 191 நாடுகள் யோகாவை கொண்டாடியுள்ளன. இது ஒரு ஆரோக்கிய புரட்சி. உலகின் நீண்ட நாள் ஜூன் 21 என்பதால் தான் யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. யோகா கூடுதல் பலனை தருகிறது’ என்றார்.

யோகா தினம்
இதனை தொடர்ந்து மைசூரில் பிரதமர் நிகழ்த்திய யோகா தின உரையை அனைவரும் நேரலையில் கண்டனர். சரியாக 7 மணிக்கு
புதுச்சேரி கடற்கரை சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 3,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகாசனம் செய்தனர். மாணவர்களுடன் மத்திய அமைச்சர், ஆளுநர் மற்றும் அரசு அதிகாரிகள் யோகா செய்தனர். முதல்வர் ரங்கசாமி,சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் மேடையில் அமர்ந்து பார்த்தனர்.
மேலும் படிக்க:
சர்வதேச யோகா தினம்: மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா செய்த பிரதமர் மோடி (புகைப்படங்கள்)
புதுச்சேரி கடற்கரை சாலையில் போல புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் 75 மையங்களில் இந்த யோகா தின விழாவை புதுச்சேரி அரசு நடத்தியது.
உங்கள் நகரத்திலிருந்து(Puducherry)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.