ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பால் விலை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த திட்டம்? அரசின் முடிவால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி!

பால் விலை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த திட்டம்? அரசின் முடிவால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி!

பாண்லே பால்

பாண்லே பால்

முதலமைச்சரின் முடிவுக்கு பிறகு தான் பால் விலை குறித்த விவரம் வெளிவரும் என பாண்லே வட்டாரம் தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

பால் உற்பத்தி நிறுவனத்தின் தொடர் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் புதுச்சேரியில் பால் விலை ஒரு லிட்டர் 42 ரூபாயில் இருந்து ரூ.50 ஆக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு  நிறுவனமான பாண்லே  மூலம் பால்  விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் சமீபகாலமாக தொடர்  நஷ்டத்தை சந்திக்கிறது. இதனால்  பால் விற்பனை விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.

புதுச்சேரிக்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் வரை தேவைப்படுகிறது. ஆனால் உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 40 லிட்டர் மட்டுமே பாண்லேவிற்கு  கிடைக்கிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து கூடுதல் விலைக்கு பால் வாங்கப்பட்டு மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கு வாங்கி 42 ரூபாய்க்கு குறைத்து விற்கப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ஏழரை லட்சம் ரூபாய் வரை நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த ஓராண்டாக பாண்லே தொடர்  நஷ்டத்தில் இயங்குவதால் நஷ்டத்தை ஈடுகட்ட  பால் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க | யானை லஷ்மி தன்னுடன் விளையாடியதை நினைத்தால் கண்ணீர் வருகிறது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உருக்கம்

தற்போது ஒரு லிட்டர் 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை 50 ரூபாயாக உயர்த்தவும்  கொள்முதல்  ஒரு லிட்டர் ரூபாய் 40 என்பதை 43 ரூபாயாக  என உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே வேளையில் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஏழாவது ஊதியக்குழு சம்பளம் பெறும் ஊழியர்களின் ஊழியத்தை ஐந்தாவது ஊதியக்குழுவுக்கு அளவிற்கு குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊழியர்களுக்கு மாதம் அரை கிலோ நெய் இலவசமாக வழங்கியதை நிறுத்திய நிறுவனம் தினமும் ஊழியர்களுக்கு தலா ஒரு லிட்டர் பால் தருவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி  தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் முடிவுக்கு பிறகு தான் பால் விலை குறித்த விவரம் வெளிவரும் என பாண்லே வட்டாரம் தெரிவிக்கிறது.

செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி.

First published:

Tags: Milk, Puducherry