ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்திற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்திற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்

குடும்பத் தலைவிகளுக்கான மாத உதவித்தொகை திட்டத்தை பொங்கலுக்குள் செயல்படுத்தப் புதுச்சேரி அரசு ஆர்வம் காட்டி வந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ரங்கசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.

அதன்படி புதுச்சேரியில் எந்தவொரு அரசு உதவித் தொகையும் பெறாமல் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கும் 21 முதல் 55 வயது வரை வசிக்கும் குடும்பத் தலைவிகளின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமியின் உத்தரவின் பேரில் இதற்கான கோப்புகள் விரைவாக தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை பொங்கலுக்குள் செயல்படுத்தப் புதுச்சேரி அரசு ஆர்வம் காட்டி வந்தது.

இது தொடர்பான கோப்புகளை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்திற்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் வழங்கியதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் மாரடைப்பால் காலமானார்!

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இந்த திட்டம் புதுச்சேரியில் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்திற்கான வாக்குறுதியை திமுக அரசு அளித்துள்ள நிலையில், திட்டத்திற்கான கணக்கெடுப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதாகவும், திட்டத்தை விரைந்து அமல்படுத்துவோம் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்தார்.

First published:

Tags: Dr tamilisai soundararajan, Puducherry, Puducherry Governor, Tamilisai Soundararajan