முகப்பு /செய்தி /புதுச்சேரி / EXCLUSIVE: புதுச்சேரி ஆளுநர் மாளிகை செலவு... 11 ஆண்டுகளில் 100% உயர்வு.. ஆர்டிஐயில் தகவல்..!

EXCLUSIVE: புதுச்சேரி ஆளுநர் மாளிகை செலவு... 11 ஆண்டுகளில் 100% உயர்வு.. ஆர்டிஐயில் தகவல்..!

புதுச்சேரி ஆளுநர் மாளிகை

புதுச்சேரி ஆளுநர் மாளிகை

தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக சம்பளம் பெறுவதால், புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலிருந்து அவர் சம்பளம் பெறுவதில்லை.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசு நிதியில் இருந்து தான் பணம் செலவழிக்கப்படும். அப்படி புதுச்சேரி ஆளுநர் மாளிகையின் செலவு குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பி இருந்தது.  இதற்கு ஆர்டிஐ மூலம் வந்த தகவலின் படி, 2010–11ல் ரூ.3 கோடியே 9 லட்சமாக இருந்த புதுச்சேரி ஆளுநர் மாளிகையின் செலவு, 2021–2022ல் 6 கோடியே 58 லட்சமாக உயர்ந்துள்ளது.

2011–12ல் ரூ. 2 கோடியே 92 லட்சமாகவும், 2012–2013ல் ரூ.3 கோடியே 82 லட்சமாகவும், 2013–2014ல் ரூ. 3 கோடியே 50 லட்சமாகவும், 2014–2015ல் ரூ. 3 கோடியே 55 லட்சமாகவும் இருந்துள்ளது. 2016ம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.

2016-17ல் பட்ஜெட்டில் ஆளுநர் மாளிகைக்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர், திருத்திய மதிப்பீட்டில் ரூ.4 கோடியே 42 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதில், அந்த ஆண்டு ரூ.4 கோடியே ஏழரை லட்சத்தை ஆளுநர் மாளிகை செலவு செய்துள்ளது. பின், 2017-18 பட்ஜெட்டில் ரூ.4 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. திருத்திய மதிப்பீட்டில் ரூ.4 கோடியே 90 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.4 கோடியே 87 லட்சம் செலவு செய்துள்ளது.

அதேபோல, 2018-19ல் பட்ஜெட்டில் ரூ.5 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, திருத்திய மதிப்பீட்டில் ரூ.6 கோடியே 5 லட்சமாக உயர்த்தப்பட்டு, ரூ.6 கோடியே 4 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. 2019-20ல் பட்ஜெட்டில் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6 கோடியே 20 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2021 பிப்ரவரி மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார். அவர், பணியமர்த்தப்பட்டதில் இருந்து, ஒதுக்கப்படும் நிதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2020–2021ல் ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 6 கோடியே 30 லட்சமும், 2021–2022ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 7 கோடியில், 6 கோடியே 58 லட்சம் செலவு செய்துள்ளது புதுச்சேரி ஆளுநர் மாளிகை.

செலவு செய்யப்படும் தொகையில் பெருமளவு ஆளுநர் மாளிகை பணியாளர்களின் சம்பளத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ., மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது. 2016ல் இருந்து கூடுதலாக ஆன செலவுகள் பெரும்பாலும், அலுவலகச் செலவுகளாகவும், ஒப்பந்தப் பணிகளுக்கு செலவிடப்பட்டதாகவும் ஆர்டிஐ., தகவலில் இருந்து தெரியவந்துள்ளது. 2010–11ம் ஆண்டில் ரூ.1 கோடியே 8 லட்சமாக இருந்த அலுவலகச் செலவுகள் 2021–22ம் ஆண்டில் ரூ. 3 கோடியே இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது.

2011ம் ஆண்டு ரூ.1 கோடியே 41 லட்சமாக இருந்த ஆளுநர் மாளிகை பணியாளர்களின் சம்பளச் செலவு, 2022ல் ரூ 2 கோடியே 6 லட்சமாக உயர்ந்தது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக சம்பளம் பெறுவதால், புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலிருந்து அவர் சம்பளம் பெறுவதில்லை.

யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் : 

ஆளுநர் / துணை நிலை ஆளுநர் – ரூ 3.5 லட்சம்.

ஆளுநரின் செயலர் – ரூ 1.33 லட்சம்.

ஆளுநரின் தனி செயலர் – ரூ 1.31 லட்சம்.

ஆளுநர் செயலரின் தனி செயலர் – ரூ 1.29 லட்சம்.

கண்காணிப்பாளர் – ரூ 96,708

First published:

Tags: Governor, Puducherry, Puducherry Governor, Tamilisai Soundararajan