ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பொங்கல் பரிசு அமோகம்..! வெல்லம், முந்திரி என 10 அசத்தல் பொருட்கள்... ரேசன் கடையில் விநியோகிக்க புதுச்சேரி அரசு முடிவு

பொங்கல் பரிசு அமோகம்..! வெல்லம், முந்திரி என 10 அசத்தல் பொருட்கள்... ரேசன் கடையில் விநியோகிக்க புதுச்சேரி அரசு முடிவு

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

பச்சரிசி, வெள்ளம், முந்திரி உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.

ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து ரேஷன் அட்டைதார்களும், அவர்களின் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கி செல்வர்.

தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரியில்  இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.  இதுதொடர்பாக குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் கூறுகையில், குடும்ப அட்டைக்கு தலா ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து  3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.17 கோடியை புதுச்சேரி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் பணி முடிந்தவுடன் அங்கன்வாடி அல்லது ரேஷன்கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Pongal 2023, Pongal Gift, Puducherry