ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

மாணவர்களுக்கான 1 ரூபாய் பேருந்து.. புதுச்சேரியில் மீண்டும் இயக்கம்

மாணவர்களுக்கான 1 ரூபாய் பேருந்து.. புதுச்சேரியில் மீண்டும் இயக்கம்

புதுச்சேரி

புதுச்சேரி

Puducherry News : முதல் நாள் என்பதால் மாணவ மாணவிகளுக்கு பேருந்து இயக்கப்பட்டது தெரியவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரசால் கடந்த 2010-ம் ஆண்டு முதல் மாணவர் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் பள்ளிகளுக்கு பயணிக்கலாம். கிராமத்திலிருந்து நகரிலுள்ள பள்ளிக்கு படிக்க வரும் ஏழை மாணவ, மாணவிகள் அதிகம் பயன்பெற்றனர். புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25,000 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு முதல் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வகுப்புகள் திறக்கப்பட்டன. ஆனால் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் ஏழை குழந்தைகள் தினமும் ரூ.50 வீதம் செலவழித்து வந்தனர். இதனால் ஏழை எளிய மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

புதுச்சேரி பேருந்து

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளி கல்வித்துறை இயக்கம் சார்பாக ஒரு ரூபாய் சிறப்பு பேருந்து இயங்கப்பட்டது. மேலும் முதல் நாள் என்பதால் மாணவ மாணவிகளுக்கு பேருந்து இயக்கப்பட்டது தெரியவில்லை. இதனால் ஒரு ரூபாய் சிறப்பு பேருந்து வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்கம் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்: பிரசாத் ( புதுச்சேரி)

First published:

Tags: Bus, Puducherry, School students, Tamil News