Home /News /puducherry /

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவிகள் மோதல்.. பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவிகள் மோதல்.. பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை

என்.கே.சி பள்ளி

என்.கே.சி பள்ளி

சுப்ரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கே.என்.சி மகளிர் பள்ளிக்கு சென்றனர். அப்போது, அங்குள்ள மாணவிகளுக்கும், இந்தப் பள்ளி மாணவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரியில் இருவேறு அரசுப் பள்ளி மாணவிகளை ஒரே வளாகத்தில் சேர்த்ததால் அவர்களிடையே  மோதல் ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி, புஸ்சி வீதியில் இயங்கிய வந்த சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பழமையான கட்டடம் என்பதாலும் கட்டடம் பலவீனமாக இருப்பதாலும் அங்கு படித்து வரும் 500க்கும் மேற்பட்ட மாணவிகள், புதுச்சேரி குருசுகுப்பத்தில் உள்ள கே.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு கே.என்.சி பள்ளி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கல்வித்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி, இரு பள்ளி மாணவிகளும் ஒரே வளாகத்தில் செயல்படுமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை சுப்ரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கே.என்.சி மகளிர் பள்ளிக்கு சென்றனர். அப்போது, அங்குள்ள மாணவிகளுக்கும், இந்தப் பள்ளி மாணவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த இரு பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் சிலர், பள்ளியின் உள்ளே புகுந்து மாணவிகளை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனையடுத்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி உள்ளிட்டோர், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வகுப்பறைக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் பொதுப்பணித்துறை
அமைச்சருமான லட்சுமி நாராயணன் விரைந்து வந்து பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தினார்.

கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரித்த அவர், பள்ளிக் கட்டடம் இல்லாததால் தற்காலிகமாக வெளியில் இருந்து பள்ளி மாணவிகள் வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தேவையின்றி ஆசிரியர்கள், மாணவிகள் பிரச்சனை செய்யக்கூடாது எனவும் எச்சரித்தார்.

இதையும் வாசிக்க: கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை - ஓபிஎஸ் கண்டனம்

தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் இருந்ததால் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்று இடம் தேர்வு செய்து, அவர்களை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Girl students, Government school, Puducherry

அடுத்த செய்தி