ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. புதுச்சேரிக்கு கூடுதலாக 50,000 தடுப்பூசி வழங்க கோரிக்கை!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. புதுச்சேரிக்கு கூடுதலாக 50,000 தடுப்பூசி வழங்க கோரிக்கை!

கொரோனா தடுப்பூசி வழங்க கோரிக்கை

கொரோனா தடுப்பூசி வழங்க கோரிக்கை

Puducherry corona test | மத்திய அமைச்சருடனான கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரிக்கு 50,000 தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுபடுத்த கூடுதலாக 50,000 தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவிடம் புதுச்சேரி அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக  ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில்  முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,தேனீ ஜெயக்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு கலந்துகொண்டனர். புதுச்சேரியில் நோய் தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் சுகாதார துறை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது.

இதையும் படிங்க | புதுச்சேரியில் 300 டன் மரங்கள் வெட்டி கடத்தல்... வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

மீண்டும் கொரோனாபரிசோதனைகளை அதிகப்படுத்துவது, மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது, படுக்கை மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், புதுச்சேரியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது புதுச்சேரியில்  3,620 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதலாக 50,000 தடுப்பூசிகள் தேவை என்றும் அதை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஆலோசனையில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் ஒரு மாதம் கொரோனா வைரஸை கண்டறிவதற்கான பரிசோதனை கூடம் புதுச்சேரியில் கொரோனா மருத்துவமனையில் வரும் 28ஆம் தேதி முதல்வர் ரங்கசாமியால் துவக்கி வைக்கப்பட உள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் ரூ.3.5 கோடி மதிப்பில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன ஆய்வகம் தயாராகிறது. உருமாறும் கொரோனா வைரசை கண்டறிய புதுச்சேரிக்கென தனி ஆய்வகம் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பூனே, ஹைதராபாத் ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. இனி புதுச்சேரியிலேயே முடிவுகளை விரைந்து கண்டறிய முடியுமென சுகாதார துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Corona spread, CoronaVirus, Puducherry