முகப்பு /செய்தி /புதுச்சேரி / சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு அதிகாரிகளுக்கு சிக்கல்: பிப்ரவரி 15 வரை காலக்கெடு நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு

சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு அதிகாரிகளுக்கு சிக்கல்: பிப்ரவரி 15 வரை காலக்கெடு நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

Puducherry Government | சொத்து கணக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது விஜிலென்ஸ் ஒப்புதல் மறுப்பு உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 15-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுள்ளது.

புதுச்சேரியில் உள்ள குரூப்  ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள்  2023 ஜனவரி 31ம்  தேதிக்குள் அரசு தெரிவித்திருந்த இணையதள முகவரிக்கு தங்களுடைய 2022ம் ஆண்டின், அசையும், அசையா சொத்துக்கள் குறித்த விபரங்களை சமர்பிக்க தெரிவிக்கப்பட்டது. பல அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏற்கனவே அமைத்த கடவுச்சொல்லை மறந்துவிட்டதாகவும், அதை மீட்டமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆன்லைன் போர்ட்டலைப் பார்க்கும்போது பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் ஆன்லைனில் அசையும், அசையா சொத்து விவர கணக்குகளைப் பதிவேற்றியிருந்தாலும், இன்னும் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரிகள், கீழ்நிலை அலுவலகங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்கள், கடவுச்சொல் சிக்கல் காரணமாக இன்னும் தங்கள் கணக்குகளைப் பதிவேற்றவில்லை. சில அதிகாரிகள் மட்டுமே தங்கள் கணக்கு தகவல்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

பின்னர் ஒப்புதலைப் பதிவிறக்கம் செய்து கையொப்பமிடப்பட்ட நகலை பதிவேற்றி ஒப்புதலைப் பெற்ற அதிகாரிகள் மட்டுமே கணக்குகளை சமர்ப்பித்ததாகக் கருதப்படுகிறார்கள். 2022 டிசம்பரில் குரூப் சியில் இருந்து குரூப் பிக்கு பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும் ஆன்லைன் மூலம் கணக்குகளை சமர்ப்பிப்பதில் சிரமம் இருப்பதையும் தெரிவித்தனர்.

இதனால்  2022ஆம் ஆண்டிற்கான கணக்கு விவரங்களை ஆன்லைனில் அனுப்பும் காலத்தை வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை புதுச்சேரி அரசு நீட்டித்துள்ளது. இதுவரை தாக்கல் செய்யாத அனைத்து குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகள் பிப்ரவரி 15ம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அதை ஏற்க முடியாது. விஜிலென்ஸ் ஒப்புதல் மறுப்பு உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலரின் உத்தரவுப்படி சார்பு செயலர் கண்ணன் அரசு துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையை  அனுப்பியுள்ளார்.

First published:

Tags: Puducherry, Tamil News