ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரி: இனி 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - அரசு அனுமதி

புதுச்சேரி: இனி 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - அரசு அனுமதி

புதுச்சேரி கடைகள்

புதுச்சேரி கடைகள்

பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8.00 மணிக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  புதுச்சேரியில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

  இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அனுமதியுடன் தொழில்துறை சார்பு செயலர் முத்துமீனா பிறப்பித்துள்ள ஆணையில், புதுச்சேரியில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

  அதன்படி, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும். பணியாளர்கள் கூடுதல் நேரம் சரியாக குறிப்பிடாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டால், உரிமையாளர் அல்லது மேலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  இதையும் வாசிக்க: இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை விரைந்து மீட்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் 

  மேலும் பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8.00 மணிக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை என்றும் இரவில் பெண் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு எழுத்துப்பூர்வ ஒப்புதலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளும் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Puducherry