ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த புதுச்சேரி அரசு

தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த புதுச்சேரி அரசு

காட்சிப் படம்

காட்சிப் படம்

, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

    தீபாவளி பண்டிகையை ஒட்டி அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ம். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

    எனினும், தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய் வேலை நாளாக இருப்பதால், தீபாவளி அன்றிரவே பொது மக்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு  திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் மனத்திருப்தியுடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில்,  25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்.. எவ்வளவு தொகை தெரியுமா?

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Deepavali, Puducherry, School