புதுச்சேரியில் இறந்த மணக்குள விநாயக கோவில் யானை லட்சுமியின் கால் தடம் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை கடந்த 30ம் தேதி காலை நடைபயிற்சிக்கு சென்றபோது கல்லூரி அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானை இறந்த செய்தி கேட்டதும், புதுவை மக்கள் அனைவரும் அங்கு திரண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனையடுத்து, அங்கிருந்து யானையின் உடல் மணக்குள விநாயகர் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வனத்துறைக்கு சொந்தமான ஜேவிஎஸ் நகரில் புதைக்கப்பட்டது. இதனையடுத்து யானை உயிரிழந்த இடத்தில் சிலை வைத்து விளக்கு ஏற்றி, மக்கள் வழிபட்டு வந்தனர். இதேபோல் யானை புதைக்கப்பட்ட இடத்திலும் தினமும் மக்கள் வழிபட்டு சென்றனர்.
இதையும் படிங்க | புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)
இந்நிலையில், யானை லட்சமி இறந்து இன்று 16 நாட்கள் ஆகிறது. இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் ஈஸ்வரன் கோவில் பின்புறம் யானை லட்சுமி தங்கியிருந்த இடத்தில் 16 வது நாள் காரியங்கள் நடைபெற்றன. இதில் கோவில் நிர்வாகத்தினர், யானை பாகன் மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதனிடையே நேற்று யானை லட்சுமி எப்போதும் நிற்கும் இடத்தில் யானையின் காலடி அச்சு திடீரென தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், யானை சாணத்தின் வாசனை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், யானையின் காலடி தடம் தெரிந்த இடத்தில் பொதுமக்கள் மலர் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Puducherry