ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியிலும் உயரும் மின் கட்டணம்.. ஏப்ரல் முதல் அமல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

புதுச்சேரியிலும் உயரும் மின் கட்டணம்.. ஏப்ரல் முதல் அமல்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Puducherry eb rate increase | வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

புதுச்சேரியில் தற்போது  முதலில் பயன்படுத்தும் 100 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.2.30 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.  201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5க்கு பதிலாக ரூ.5.45 பைசா வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் முதல் 100 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.5.70க்கு பதிலாக 6  ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.6.75க்கு பதிலாக ரூ.6.85 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 251 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்குரூ.7.50க்கு பதிலாக ரூ.7.60 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது  யூனிட்டுக்கு ஐந்து ரூபாய் 30 காசிலிருந்து, ஐந்து ரூபாய் 45 காசுகளாக உயர்த்தப்படுகிறது.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் விரைவில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கணிப்பு நடத்தும். அதன் பிறகு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரும் என இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

First published:

Tags: EB Bill, Puducherry