ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

முடிவுக்கு வந்த புதுச்சேரி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

முடிவுக்கு வந்த புதுச்சேரி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்

மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  புதுச்சேரியில் 6 நாட்களாக நடைபெற்ற மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

  மின் துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் கடந்த 28-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

  இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் உச்சகட்டமாக கடந்த 1-ம் தேதி 5 மணி நேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

  இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. எனினும், போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், எஸ்மா சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  இதையும் வாசிக்க: கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  தொடர்ந்து போராட்டக்குழுவினருடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், மத்திய அரசுடன் பேசி இறுதி முடிவு எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதனையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்ட போராட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக கூறிச் சென்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Government Employees, Protest, Puducherry