முகப்பு /செய்தி /புதுச்சேரி / வாய்க்காலில் அரை நிர்வாணமாக மிதந்த உடல்.. மீட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அலரவைத்த போதை ஆசாமி..!

வாய்க்காலில் அரை நிர்வாணமாக மிதந்த உடல்.. மீட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அலரவைத்த போதை ஆசாமி..!

வாய்க்காலில் மிதந்த போதை ஆசாமி

வாய்க்காலில் மிதந்த போதை ஆசாமி

Puducherry shocking | வாய்க்காலில் பிணம் போல் மிதந்து புதுச்சேரி போலீசாரை அலற வைத்த போதை ஆசாமி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி - கடலூர் எல்லைப் பகுதியான முள்ளோடை கிராமத்தில் அமைந்துள்ள வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திர்கு சென்ற போலீசார், உள்ளாடைகள் மட்டும் அணிந்திருந்த நிலையில், தலைக்குப்புற மிதந்து கிடந்த அந்த ஆணின் சடலத்தை கரைக்கு இழுக்க முயன்றனர். அப்போது திடீரென இறந்ததாக கூறப்பட்ட நபர் எழுந்து அமர்ந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் நான் களைப்பாக உள்ளேன் என்றும், அதனால் தண்ணீரில் படுத்து யோகா செய்கிறேன் என கூறியுள்ளார். மேலும், எனக்கு பல வித்தைகள் தெரியும் என்றும் இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் முழுவதும் என் வாய்க்குள் சென்று தான் வெளிவருகிறது என கூறிவிட்டு மறுபடியும் மிதக்க தொடங்கினார்.

அந்த நபர் போதையில் உளறுவதை உணர்ந்த போலீசார், அவரிடம் நைசாக பேசி, கரைக்கு அழைத்து வந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Drunken Son, Puducherry