Home /News /puducherry /

மது போதையில் காரை ஓட்டி 25 பைக் , 4 கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய ரவுடி... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

மது போதையில் காரை ஓட்டி 25 பைக் , 4 கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய ரவுடி... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

மது போதையில் விபத்து ஏற்படுத்திய ரவுடி

மது போதையில் விபத்து ஏற்படுத்திய ரவுடி

மது போதையில் விபத்து ஏற்படுத்தியரை போலீசார் விசாரணை செய்ததில் அவர் பிரபல ரவுடி ஆறுமுகம் என்ற நண்டு ஆறுமுகம் என்பதும், இவர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் என்பதும் தெரியவந்தது.

புதுச்சேரியில் மது போதையில் காரை ஒட்டி 25 பைக்,4 கார்கள்  மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சொகுசு கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது உரசி கொண்டும் , சிலரை மோதி விட்டு அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. உப்பளம் சோனாம்பாளையம் , ரயில் நிலையம் , சுப்பையா சாலை என வாகனம் தாறுமாறாக ஓடியது. இதனை பார்த்த மக்கள் ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் அந்த காரை விரட்டினர்கள். அப்போது 25 பைக், 4 கார்கள்  மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் பைக்கில் காரை துரத்தினர். இதனிடையே ஒதியன் சாலை காவல் நிலையம் அருகே கார் டயர் வெடித்து நின்றது. விரட்டி வந்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்தவரை இறக்கிய போது அவர் உச்சகட்ட போதையில் இருந்தார். அவருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆறுமுகம் என்ற நண்டு ஆறுமுகம். இவர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் என்பது தெரியவந்தது.

குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியவர்


தனது குடும்பத்தினரை கடற்கரையில் இறக்கி விட்டு காரிலேயே மது அருந்திவிட்டு காரை இயக்கி சாலையில் சென்ற  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்ப்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்ற போது அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

நண்டு ஆறுமுகம் மதுபோதையில் ஓட்டி வந்த கார்


இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுதியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் காவலர்களை திட்டியதற்கும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவத்தால் புதுச்சேரி ரயில் நிலையம்,புஸ்சி வீதி,உப்பளம் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Accident, Puducherry

அடுத்த செய்தி