ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

மாண்டஸ் புயல் எச்சரிக்கை.. புதுச்சேரிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு..!

மாண்டஸ் புயல் எச்சரிக்கை.. புதுச்சேரிக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு..!

புதுச்சேரி சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழு

புதுச்சேரி சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழு

Cyclone mandous warning | கடல் சீற்றம் அதிகம் ஏற்படுவதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரிக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடற்கரையோர கிராமங்களில் ஆய்வு செய்து, அபாயம் ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குவதற்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றது. இது நாளை மாலை அல்லது நாளை மறுநாள் காலை புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், அதிதீவிர கனமழை இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதியில் கொண்டு சென்று தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் 240 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதனிடையே மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இவர்கள் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் புயல் மற்றும் கனமழையின் போது கடல் சீற்றம் ஏற்படுவதால் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.

செய்தியாளர்: பிரசாந்த், புதுச்சேரி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain, Puducherry