அம்பேத்கரின் 66 ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அம்பேத்காரின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, அரசியலமைப்பின் தந்தை சட்ட மேதை அவரது நினைவு நாளை போற்றுவதில் மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
அம்பேத்கர் என்னவெல்லாம் கனவு கண்டாரோ, இன்று அது இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய சட்டப் புத்தகம் தான் எனது புனித நூல் என்று பிரதமர் அறிவித்தார்.
இதையும் படிக்க : காவி உடையில் அம்பேத்கர்.. சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகி கைது!
ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறோம். நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கனவு கண்டாரோ அந்த வழியில் நமது நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த பலன் தான் ஜி-20 மாநாட்டிற்கு நாம் தலைமை தாங்குகிறோம் அந்த வகையில் நாம் அவருக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஜி 20 மாநாடு குறித்து வரும் 9 ம் தேதி பிரதமர் மோடி ஆளுநர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதில் நான் தெலுங்கானாவிலிருந்து கலந்து கொள்ள உள்ளேன். ஜி20 மாநாட்டின் பெருமை குறித்து கட்டுரை போட்டிகள் பேச்சுப் போட்டிகள் தெலுங்கானா மற்றும் புதுவையில் நடத்த இருக்கிறோம். ஜி 20 மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறோம் என்பது பெருமைக்குரிய விஷயம், மிகப்பெரிய பெருமையை இந்தியா பெற்றுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், “ஆளுநர் பதவி என்பது ஒரு முதல் குடிமகன் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க தான் வேண்டும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும், முழுமையாக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆளுநரை திரும்ப பெற வழக்கு தொடர்வது சரியல்ல இது என்னுடைய கருத்து” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dr tamilisai soundararajan, Dr. B.R.Ambedkar, Governor, Tamilisai Soundararajan