ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பல்கலைக்கழகத்தை கண்டித்து தினமும் 16 கிமீ நடக்கும் பேராசிரியர்... பதவி உயர்வு வழங்காததால் நூதன போராட்டம்

பல்கலைக்கழகத்தை கண்டித்து தினமும் 16 கிமீ நடக்கும் பேராசிரியர்... பதவி உயர்வு வழங்காததால் நூதன போராட்டம்

பேராசிரியர் செல்வராஜ்

பேராசிரியர் செல்வராஜ்

பதவி உயர்வில் கால தாமததத்தை கைவிடும் வரை நடைபயணம் தொடரும் என பேராசிரியர் செல்வராஜ் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரியில் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் செய்து வரும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து பேராசிரியர் ஒருவர் தினமும் 16 கிலோமீட்டர் நடந்தே பயணித்து பல்கலைக்கழகத்து வந்து செல்கிறார்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதவி உயர்வு கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து பேராசிரியர்  பதவி உயர்வை காலதாமதப்படுத்தி வந்தது. இதனை கண்டித்து தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சங்க தலைவர் செல்வராஜ் பல்கலைக்கழகத்திற்கு தனது இல்லத்தில் இருந்து பணிக்கு  நடைப்பயணமாக செல்கிறார்.

லாஸ்பேட்டை மகாவீர் நகரில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு 8 கி.மீ. நடந்து செல்கிறார்.மீண்டும் 8 கி.மீ. நடந்தே வீடு வருகிறார். பதவி உயர்வில் கால தாமததத்தை கைவிடும் வரை நடைபயணம் தொடரும் என  நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த காலகட்டத்திற்கு தனது பயணபடியை நிறுத்துமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபயணம் வரும் பேராசிரியரருடன்  ஒரு சிலர்  இணைந்தனர். பதவி உயர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் வந்துவிடும் - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்   110 பேராசிரியர்கள் பணியாற்றினார்கள். 13 ஆண்டுகள் பணிமுடித்த பேராசிரியர்களுக்கு  ஆறு மாதத்திற்கு   ஒருமுறை காலகட்ட பதவி உயர்வு  வழங்க வேண்டும். ஆனால் பதவி உயர்விற்காக பேராசிரியர்களிடம்  2020 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் கிடப்பில் இருக்கிறது. இதற்காக செப்டம்பர் மாதம் உள்ளிருப்பு  போராட்டம் நடத்தினார்கள்.

முதலமைச்சர் ரங்கசாமி தலையிட்டு இந்த கோரிக்கையை நியாயமானது என்பதால்  தீர்வு காண உத்தரவிட்டார் ஆனால் இதற்கான கோப்பு ஆளுநர் மாளிகை, சட்டமன்றம், தலைமைச் செயலர் என ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளே சுற்றி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.

Published by:Murugesh M
First published:

Tags: Puducherry, University