முகப்பு /செய்தி /புதுச்சேரி / பெண்களின் ஹேண்ட் பேக்களை திருடி சொகுசு வாழ்க்கை... சிசிடிவியால் சிக்கிய திருடன்!

பெண்களின் ஹேண்ட் பேக்களை திருடி சொகுசு வாழ்க்கை... சிசிடிவியால் சிக்கிய திருடன்!

கொள்ளையன் கைது

கொள்ளையன் கைது

Puducherry theft | பைக் திருட்டுக்கெல்லாம் நடவடிக்கை பாயாது என நம்பிக்கையில் தொடரில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் பெண்களின் கைப்பையை மட்டும் குறிவைத்து திருடி சொகுசாக வாழ்ந்து வந்த திருடன் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். தமிழக்ததில் கைவரிசை காட்டிய திருடன் புதுச்சேரியில் சிக்கிக் கொண்டது எப்படி?

புதுச்சேரி உருளையன்பேட்டை எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் 37 வயதான ஹேமாவதி. தையல் கலைஞரான இவர் வேலை முடித்து இளங்கோ நகர் வழியாக வீட்டிற்கு செல்வது வழக்கம். இதனை நோட்டம் விட்ட இளைஞர் ஒருவர் அவரை இருசக்கரவாகனத்தில் பின் தொடர்ந்து வந்து அவரது கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

செய்வதறியாது திகைத்த ஹேமாவதி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கைப்பையை பறித்துச் சென்றது, அடிதடி வழக்கில் தொடர்புடைய 25 வயதான எழிலன் என்பது தெரியவந்தது.

அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்ததுடன், வீட்டிலிருந்த தையல் கலைஞரின் பை மற்றும் அதில் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் மீது புதுச்சேரி காவல் நிலையங்களில் இருசக்கர வாகன திருட்டு வழக்கு இருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களாக சென்னையில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டே அங்கு பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

பெண்களின் கைப்பையை குறிவைத்து திருடும் அவர், அதில் இருக்கும் செல்போன்களை விற்பனை செய்து சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். சென்னையில் போலீசார் அவரைத் தேடுவதை அறிந்த எழிலன், புதுச்சேரிக்கு தஞ்சமடைந்தார். புதுச்சேரியிலும் அதேபாணியில் அவர் கைப்பைகளை திருடி செல்போன்களை விற்று மது குடித்து மகிழ்வாய் வாழ்ந்துள்ளார்.

சென்னையில் திருடிய பைகளுக்கு இதுவரை போலீசார் பிடிக்காத காரணத்தினால் இதற்கெல்லாம் கைது செய்ய போகிறார்களா...? என்ற எண்ணத்தினால் புதுச்சேரியிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். தமிழக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தவர், புதுச்சேரியில் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

திருட்டுக்கு இவர் பயன்படுத்திய வாகனமும் திருட்டு இருசக்கர வாகனம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் எழிலனை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: CCTV, Puducherry, Theft