Home /News /puducherry /

பஞ்சு உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள்

பஞ்சு உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள்

பஞ்சினை உண்ணும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள்

பஞ்சினை உண்ணும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள்

Puducherry | மூன்று மாதங்களாக மூடப்பட்டிருக்கும் புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலையை உடனடியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்பாலை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், இன்று பஞ்சினை உண்ணும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரி திருபுவனை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும்  கூட்டுறவு நிறுவனமான ஸ்பின்கோ நூற்பாலையில் 350 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டு வந்த பஞ்சு போன்ற மூல பொருட்களை நூர்பாலை வாங்குவதை நிறுத்தியதால் கடந்த மூன்று மாத காலமாக நூர்பாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனால் கூட்டுறவு நூற்பாலை மூடப்படும் என அச்சத்தில் உள்ள  ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நூற்பாலையை இயக்க வேண்டும், உற்பத்தி செய்து இரண்டு ஆண்டுகளாக ஆலையில் இருப்பு வைத்திருக்கும் நூலை விற்று தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்,  அரசே ஸ்பின்கோ நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை லால்பகதூர் சாஸ்திரி சாலை சந்திப்பில் பஞ்சு உண்ணும் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Also see... காட்டு யானையை பிடிக்க வந்த அரிசிராஜாவுக்கு மதம் பிடித்தது..

அப்போது தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் அரசு தங்களுக்கு  உடனடியாக இருப்பில் உள்ள நூலை விற்று ஊதியம் வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக சட்டமன்றத்தை  முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நூற்பாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Puducherry, Strike

அடுத்த செய்தி