ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு இல்லை... முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு இல்லை... முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம்

ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி

ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி மாநில நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநர், சபாநாயகர் போன்றோரின் தலையீடு ஏதும் இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  புதுச்சேரியில் கடந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக ரங்கசாமி ஆட்சி பொறுப்பேற்று அரசை நடத்தி வருகிறார். அத்துடன் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் உள்ளார்.

  புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தமிழிசை தலையீடு உள்ளதாகவும், அவர் தான் சூப்பர் முதலமைச்சர் போல செயல்படுகிறார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த விமர்சனமானது முதலமைச்சர் ரங்கசாமிக்கு கடும் நெருக்கடியை தந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

  நேற்று புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மாநில நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநர், சபாநாயகர் போன்றோரின் தலையீடு ஏதும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டால் தான் புதுச்சேரி வளர்ச்சி பெறும் என்றார்.

  இதையும் படிங்க: அரசியலைவிட்டு விலகத் தயாரா? சீறும் ஓ.பி.எஸ்- அ.தி.மு.கவின் ஒற்றைமுகமாக இபிஎஸ்ஸால் மாற முடியாதது ஏன்?

  மேலும் அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.1,000 பரிசுதொகையாக வழங்கப்படும் என்றும், மழைக்காலம் நெருங்கியதால் மழைவெள்ளம் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Puducherry, Tamilisai Soundararajan