Home /News /puducherry /

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. 15 மாதங்களுக்கு பிறகு பிரதமரை சந்திக்கும் புதுவை முதல்வர்

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. 15 மாதங்களுக்கு பிறகு பிரதமரை சந்திக்கும் புதுவை முதல்வர்

புதுச்சேரி - முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி - முதலமைச்சர் ரங்கசாமி

Puducherry | முதல்வராக ரங்கசாமி பதவியேற்று 15 மாதங்களுக்குப் பிறகு  முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் புதுச்சேரிக்கு புதிய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
புதுச்சேரியில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பதவி ஏற்றது முதல் பிரதமரை முதலமைச்சர் சந்திப்பார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வில்லை. கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாமல் அரசின் தேவைகளுக்காக 5 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அது முடிவடைந்ததால் தற்போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு தயாராகி வருகிறது. இதற்காக மாநில திட்டக்குழு துணை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதில் 11,000 கோடிக்கான வரைவு பட்ஜெட் இறுதி செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசிடம் கூடுதலாக 2000 கோடி ரூபாய் கேட்டு கோப்பு அனுப்பப்பட்டது. யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.

நாளை பத்தாம் தேதி புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் துவங்குகிறது. ஆனால் பட்ஜெட் தாக்கல் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் முதலமைச்சர் ரங்கசாமி டெல்லி  சென்றுள்ளார். நேற்று இரவு 10.40 மணிகு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் நள்ளிரவில் டெல்லி சென்றார்.

இன்று பகல் 12. 45 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார். முன்னதாக   தனது வீட்டு அருகில் உள்ள ஆன்மீக குருவான அப்பா சாமி கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு புறப்பட்டார் ரங்கசாமி.
கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஒரு முதலமைச்சர் 15 மாதங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக பிரதமரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு பயம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில்  முதல்முறையாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் பட்ஜெட் தொகை குறித்தும் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்தும் 10,000 கோடி  ரூபாய் கடன் தள்ளுபடி செய்வது குறித்தும் பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். மேலும் புதிய குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை இவர்களுடன்  இருப்பார் என தெரிகிறது.

Also see... பாஜக கூட்டணியில் விரிசல்: சூடு பிடிக்கும் பீகார் அரசியல் களம்

முதல்வராக ரங்கசாமி பதவியேற்று 15 மாதங்களுக்குப் பிறகு  முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் புதுச்சேரிக்கு புதிய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: PM Modi, Puducherry, Puthucherry cm

அடுத்த செய்தி