புதுச்சேரியில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிவலுவாக உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நீடராஜபயர் வீதியில் சட்ட புத்தகங்களின் சென்னை கிளை நிறுவனத்தை முதல்வர் ரங்கசாமி இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதுச்சேரியில் 15 ஆம் தேதி முதல் கடல் வழி சரக்கு போக்குவரத்து துவங்க இருக்கிறது. இதே போல் பயணிகள் கப்பல் போக்குவரத்தும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி என்பது கட்டாய திருமணம், எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து ஆகும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறிய குற்றச்சாட்டை மறுத்த முதல்வர், புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. பாஜக கூட்டணி ஆட்சியில் நல்ல திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
புதுச்சேரிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இது பற்றி பொது மேடையில் விவாதிக்க தயாரா..? என நாராயணசாமியின் சவாலுக்கு சட்டமன்றத்தில் பதிலளிக்கப்படும். திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் போடப்படும் என ரங்கசாமி பதிலளித்தார்.
புதுச்சேரிக்கு முதலமைச்சர் ரங்கசாமி இருக்கும் வரை மாநில அரசு வராது என நாராயணசாமி கூறிய குற்றச்சாட்டை மறுத்த ரங்கசாமி, அந்த மாநில அந்தஸ்தை நாராயணசாமி வாங்கி இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அவர் கருப்பு சட்டை போட்டு போராடியும் பெறவில்லை. அப்போது வாங்கி இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். நிச்சயமாக மாநில அந்துஸ்து பெறப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Puducherry