புதுச்சேரியில் சிவபெருமான் உருவத்தில் முதலமைச்சர் ரங்கசாமியையும், முருகன் உருவத்தில் கல்வியமைச்சர் நமச்சிவாயத்தையும் சித்தரித்து அரசு ஊழியர்கள் வைத்த போஸ்டர் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
புதுச்சேரி அரசு கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இலவச ரொட்டி பால் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இவர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் பத்தாயிரத்தை வழங்கி உத்தரவு வெளியிட்டார்.
கேட்ட வரத்தை கொடுத்ததற்காக சிவபெருமானாக முதலமைச்சர் ரங்கசாமியையும், முருகனாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவத்தையும் சித்தரித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஊழியர்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.
சுதேசி பஞ்சாலையிலிந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் அண்ணா சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டமன்ற முன்பு முடிவடைந்தது. அங்கே சிவபெருமானையும் முருகனையும் அவர்கள் வழிபட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அருள் புரிய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்து கடவுள்களை போல முதல்வர் மற்றும் அமைச்சரை
சித்தரித்து ரொட்டி பால் ஊழியர்கள் நடத்திய இந்த போராட்டம் தற்போது விமர்சத்திற்குள்ளாகி பேசப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: God, Puducherry, Puthucherry cm