முகப்பு /செய்தி /புதுச்சேரி / "சாதி, மத பெயரால் நாட்டை துண்டாக்க பாஜக முயற்சி" - முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு!

"சாதி, மத பெயரால் நாட்டை துண்டாக்க பாஜக முயற்சி" - முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு!

நாராயணசாமி

நாராயணசாமி

Puducherry Narayanasamy speech | நாட்டைத் துண்டாக்க நினைக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு பதிலடி கொடுக்க தான் இந்த பாதயாத்திரை - நாராயணசாமி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

சாதி, மத பெயரால் நாட்டை துண்டாக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-ம் முயற்சிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய - மாநில அரசுகளை  கண்டித்து புதுச்சேரியில்  காங்கிரஸ் கட்சி சார்பில் 30 தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இன்று துவங்கி இரண்டு மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் இப்பயணத்தை முத்தியால்பேட்டை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார். இதில், எம்பி வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “சாதி மத பெயரால் பாஜக மக்களை பிரிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது. மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பணவீக்கம் அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இது பற்றி கவலைப்படாமல் மோடி அரசானது நாட்டு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் மக்களை பிரித்தாலும் வேலையில் ஈடுபட்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.

மேலும் இதனால் தான் இந்திய நாட்டு மக்களை ஒருங்கிணைக்க ராகுல் காந்தி 4000 கிலோமீட்டர் தூரம் வரை பாதயாத்திரை மேற்கொண்டார் என்றும் நாட்டைத் துண்டாக்க நினைக்கும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் க்கு பதிலடி கொடுக்க தான் இந்த பாதயாத்திரை ராகுல் காந்தி மேற்கொண்டார் எனவும் கூறினார்.

ஏழைகளின் அரசு  இது இல்லை. பணக்காரர்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும்தான் இந்த அரசு செயல்படுகிறது. இதனை கண்டித்து தான் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடைபயணம். அதனை பிரதிபலிக்கும் வகையில் புதுச்சேரியில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் வட்டார காங்கிரஸ் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. ராகுல் காந்தி சொல்லும் செய்தியையும் மத்திய -மாநில  அரசுகளின் அலங்கோல  ஆட்சியின் செயல்பாடுகளை  நடைபயணத்தில்  மக்களிடம்  தெரிவிப்போம் என்றார்.

First published:

Tags: Congress, Narayanasamy, Puducherry