முகப்பு /செய்தி /புதுச்சேரி / கறிக்காக வெட்டப்பட்ட தாய் பசு.. கறிக்கடையில் கதறும் கன்று.. புதுச்சேரியில் வைரலாகும் வீடியோ!

கறிக்காக வெட்டப்பட்ட தாய் பசு.. கறிக்கடையில் கதறும் கன்று.. புதுச்சேரியில் வைரலாகும் வீடியோ!

புதுச்சேரி கன்று வீடியோ

புதுச்சேரி கன்று வீடியோ

Puducherry | கன்று முன்பு தாய் பசுவை வெட்டியதால் தாங்க முடியாத கன்று தினமும் அந்த இடத்திற்கு சென்று கதறி அழுகிறது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் கறிக்காக பசுவை வெட்டிய இடத்தில் அதன் கன்று வந்து அழுகும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி வினோபா நகரின் எல்லைப் பகுதியில் மாடுகள் வெட்டும் களம் உள்ளது. அரசின் அனுமதி பெறாத இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் மாடுகள் வெட்டப்படுவது வழக்கம்.

இந்தப் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு கன்று ஒன்று வந்து சுத்தி கொண்டே இருந்தது. "மா...மா" என அது அழுது கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வந்த "வாயில்லா ஜீவன்களுக்கான அமைப்பு" தலைவர் அசோக்ராஜ் விசாரித்தபோது இரு தினங்களுக்கு முன்பு பசு ஒன்று கறிக்காக வெட்டப்பட்டது. அந்த இடத்தை பார்த்த அதன் கன்று அடிக்கடி இங்கு வந்து அழுவதாக கூறினார்கள்.

ALSO READ | உதயநிதி அமைச்சராவதுதான் திராவிட மாடல் : தமிழிசை விமர்சனம்!

இதனை வீடியோ எடுத்த அசோக் ராஜ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

புதுச்சேரியில் அனுமதிக்கப்படாத பல இடங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன. மறைமுகமான இடத்தில் வைத்து வெட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அதனை மீறி புதுச்சேரியில் பொது இடங்களில் வெட்டப்படுகின்றன. இவற்றை தடுக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட ஆடு- மாடுகளை வெட்டக்கூடாது, கன்றுகளை வெட்டக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அந்த விதியும் மீறப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அரசுக்கு ஆதாரங்களுடன் புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி.

First published:

Tags: Cow, Puducherry, Viral Video