ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

3 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட சென்னை - புதுச்சேரி பஸ் முதல் நாளே புஸ்னு போச்சு

3 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட சென்னை - புதுச்சேரி பஸ் முதல் நாளே புஸ்னு போச்சு

புதுச்சேரி அரசு சொகுசு பேருந்து

புதுச்சேரி அரசு சொகுசு பேருந்து

முதல்கட்டமாக ஒரே ஒரு வால்வோ பேருந்து 5 லட்சம் ரூபாய் செலவு செய்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று 5:20 மணிக்கு புறப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு சொகுசு பேருந்து முதல் நாளே பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

புதுச்சேரி அரசின் சாலை  போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வால்வோ ஏசி  பேருந்துக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

புதுச்சேரி - சென்னை இடையே பயணிகள் மிகவும் விரும்பப்பட்ட பிஆர்டிசி வால்வோ பேருந்து கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதால்ல 10 வால்வோ பேருந்துகளை மீண்டும் இயக்க பிஆர்டிசி நிர்வாகம் முடிவு செய்தது.

முதல்கட்டமாக ஒரே ஒரு வால்வோ பேருந்து 5 லட்சம் ரூபாய் செலவு செய்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று 5:20 மணிக்கு புறப்பட்டது. காலை 9 மணிக்கு சென்னையை அடைந்தது. அங்கிருந்து மீண்டும் 9:30 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட்டது.

இதையும் படிங்க | அக்காவுடன் சண்டை... அம்மா கண்டிப்பு... நெயில் பாலிஷ் குடித்து 7ம் வகுப்பு மாணவி தற்கொலை- புதுச்சேரியில் சோகம்

நண்பகல்  12:00 மணியளவில் புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையம் கிழக்கு கடற்கரை சாலை சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்து புஸ் என்ற சத்தத்துடன் நின்றுபோனது. அதனை இயக்குவதற்கு ஓட்டுனரும் நடத்துனரும் நீண்ட நேரமாக முயற்சித்தும், இயக்க முடியாததால் வேறு பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பப்பட்டனர்.

மூன்று ஆண்டுகளாக பேருந்து இயக்கப்பட்டதால் சஸ்பென்ஸ் பலூன் ராட் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்த பிறகு தான் பேருந்து இயக்கப்படும் என பிஆர்டிசி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கப்பட்ட அரசு சொகுசு பேருந்து முதல் நாளிலேயே பழுதானது என பேருந்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published by:Anupriyam K
First published:

Tags: Bus, Puducherry